அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 24.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 24.04.2022

மேஷம்
அசுவினி : சுபச்செலவுகள் அதிகமானாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
பரணி: உங்களது திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும்
கார்த்திகை 1: பிறர் மனம் வருந்தும்படியாக நடந்து கொள்ளாதீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.
ரோகிணி : உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
மிருகசீரிடம் 1,2 : அக்கம்பக்கத்தினரிடம் கடுமை காட்ட வேண்டாம்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: எதிர்பாலினத்தினரின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.
திருவாதிரை : இன்று மிகவும் கவனமாகச் செயல்படுவதும் பேசுவதும் முக்கியம்.
புனர்பூசம் 1,2,3 : குடும்பத்தில் திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாகும்.

கடகம்
புனர்பூசம் 4 : புதிய வாய்ப்புகள் வரும்போது நன்கு பயன்படுத்துவீர்கள்.
பூசம் : பணிச்சுமையால் சோர்வு ஏற்பட்டாலும் உற்சாகமாக இருப்பீர்கள்.
ஆயில்யம் : கடந்த கால செயலுக்கு உண்டான நற்பலன் கிடைக்கும்.

சிம்மம்
மகம் : பணியில் பொறுப்புடன் செயல்பட்டு நற்பெயர் எடுப்பீர்கள்.
பூரம் : உங்களுக்கு தேவையான பணம் உடனே கிடைக்கும்.
உத்திரம் 1 : உடல் நலத்தில் கவனம் செலுத்தி நன்மை காண்பீர்கள் .

கன்னி
உத்திரம் 2,3,4 : பழைய பிரச்னைகளை களைவதில் மும்முரம் காட்டுவீர்கள்.
அஸ்தம் : எதிர்கால நன்மை கருதி தீட்டிய திட்டம் இன்று நிறைவேறும்.
சித்திரை 1,2 : சேமிப்பு உயரும். மேலதிகாரியால் இருந்த தொல்லை நீங்கும்.

துலாம்
சித்திரை 3,4 : பிறருக்கு நன்மை செய்வதால் நற்பலனும் ஆசியும் கிடைக்கும்.
சுவாதி : எதிலும் அலட்சியம் வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விசாகம் 1,2,3 : பணி செய்யும் முறையில் மாற்றம் செய்து பலனடைவீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4 : கலைத்துறையில் ஆர்வம் ஏற்படும். செலவுகள் கட்டுப்படும்.
அனுஷம் : அரசியலில் முக்கியமான பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
கேட்டை : பிள்ளைகளால் பெருமிதம் அடையும் நாள். மகிழ்ச்சி கூடும்.

தனுசு
மூலம் : உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தாயாருக்கு நன்மை வரும்.
பூராடம் : பணியிடத்தில் தேவையற்ற பிரச்னைகளை சமாளிக்க வேண்டிவரும்.
உத்திராடம் 1: எதிரிகளின் பலம் குறையும். வருமானம் அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2,3,4 : பரபரப்பாக செயல்படுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.
திருவோணம் : அலுவலகத்தில் எந்தவொரு திட்டத்தையும் யோசித்து செயல்படுத்துவீர்கள்.
அவிட்டம் 1,2 : நீங்கள் முயற்சித்த விஷயங்கள் தாமதத்துக்குப் பின் நிறைவேறும்.

கும்பம்
அவிட்டம் 3,4 : உங்களுக்கு வாக்குப்பலிதம் கூடும். செல்வாக்கு உயரும்
சதயம் : குடும்பத்தில் நீண்ட காலமாக காத்திருந்த சுப நிகழ்வு உறுதியாகும்.
பூரட்டாதி 1,2,3 : பணியாளர்களுக்கு பல காலத்திற்கு பிறகு நன்மை வந்து சேரும் நாள்.

மீனம்
பூரட்டாதி 4 : பணியிடத்தில் இன்று எந்தவொரு அவசர முடிவையும் எடுக்க வேண்டாம்.
உத்திரட்டாதி : பிறருடைய குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம்.
ரேவதி : உங்களின் நலம் விரும்புவோருக்கு நல்ல யோசனையை சொல்வீர்கள்.