அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 25.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 25.04.2022

மேஷம்
அசுவினி : எதிர்பாராத உதவி கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
பரணி: வாகனத்தை பழுது பார்க்கும் வகையில் செலவு ஏற்படும்.
கார்த்திகை 1 : இளைஞர்களுக்கு புதிய சிந்தனை மனதில் தோன்றும்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : பணிச்சுமை குறையும். புத்துணர்ச்சி அதிகரிக்கும்.
ரோகிணி : வீட்டில் ஒருவருக்கு தேவையான நகையை வாங்கி கொடுப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2 : இன்று நீங்கள் கலைத்துறையில் திறமையை வெளிப்படுத்தும் நாள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : கிடப்பில் போட்டிருந்த வேலைகள் முடியும் நாள்.
திருவாதிரை : யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். அதுவே நல்லது.
புனர்பூசம்: 1,2,3 : இன்று எது செய்தாலும் முழு கவனத்துடன் செய்வீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : புதிய நபருக்கு உதவுவீர்கள். பிடிவாதத்தைக் கைவிடுவீர்கள்.
பூசம் : குடும்ப ஒற்றுமை குறையும்படி நடந்துகொள்ள வேண்டாம்.
ஆயில்யம் : ஆன்மிகத்தில் ஆர்வம் கூடும் நாள். நட்பு வட்டம் விரியும்.

சிம்மம்
மகம் : உங்களுக்கு தேவையான உதவி ஒன்று கிடைக்கும். சுபச்செலவு ஏற்படும்.
பூரம் : உங்களின் உதவியை பெற உயர்ந்த மனிதர் தேடி வருவார்.
உத்திரம் 1 : நிதித்தேவை ஒன்று விரும்பியபடியே நிறைவடையும்

கன்னி
உத்திரம் 2,3,4 : நீங்கள் திட்டமிட்ட விஷயங்கள் இன்று நடைபெறும்.
அஸ்தம் : உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களிடம் கடுமைகாட்ட வேண்டாம்.
சித்திரை 1,2 : வேண்டியவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்
சித்திரை 3,4 : சமூகத்தில் உங்களின் மரியாதை உயரும். பெருமிதம் கூடும்.
சுவாதி : நீங்கள் விரும்பிய புது வேலை கிடைக்கும். யோகமான நாள்.
விசாகம் 1,2,3 : புது நட்பு மலரும். பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும்

விருச்சிகம்
விசாகம் 4 : பகைமை ஒன்று உங்களது அனுசரிப்பினால் தீர்ந்துவிடும்.
அனுஷம் : வேற்று மொழி பேசுபவரிடம் கவனமாக இருங்கள்.
கேட்டை : அனுபவசாலியின் ஆலோசனை கிடைக்கும். உங்களின் தேவை நிறைவேறும்.

தனுசு
மூலம்: குடும்பத்தினரை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.
பூராடம்: கூடுதலாக உழைப்பதன் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள்.
உத்திராடம் 1: எதிர்பாராத சுபச்செலவு ஒன்று சந்தோஷம் தரும்.

மகரம்
உத்திராடம் 2,3,4: நண்பர் ஒருவரின் உதவியால் பழைய பிரச்னை தீரும்.
திருவோணம்: வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்விக்கும்.
அவிட்டம் 1,2: முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கவலை தீரும்.

கும்பம்
அவிட்டம் 3,4: பிரச்னை ஒன்று தீரும். எதிர்பாராத நன்மை மகிழ்ச்சி தரும்.
சதயம்: வெளி மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
பூரட்டாதி 1,2,3: வரவுக்கு மீறி செலவு செய்யாதீர்கள். பேச்சில் கவனம் தேவை.

மீனம்
பூரட்டாதி 4: உங்களின் சிறு சிறு தவறுகளை மேலதிகாரி மன்னிப்பார்.
உத்திரட்டாதி: கூடுதலாக உழைத்து நன்மை காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.
ரேவதி: புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள். நிம்மதி கூடும்.