மனைவி உட்பட 03 பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர்

Mayoorikka
3 years ago
மனைவி உட்பட 03 பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர்

வெலிவேரிய பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேக நபர் ஒருவர் தனது மனைவி உட்பட மூன்று பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய பின்னர், தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் சந்தேக நபரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வேபட வடக்கில் வசிக்கும் 33 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவரின் சகோதரி மற்றும் நண்பி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!