அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 28.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 28.04.2022

மேஷம்
அசுவினி : நண்பர்களின் பணத்தேவையைத் தீர்த்து வைப்பீர்கள்.
பரணி: எதிர்பாராத நற்செய்தி ஒன்று வரும். நட்பு வட்டம் விரியும்.
கார்த்திகை 1: உங்களுக்கு தேவையான புதிய விஷயத்தை கற்றுக்கொள்வீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : சிறு செயல்கள் மூலம் மற்றவருக்கு நன்மை செய்வீர்கள்.
ரோகிணி : நண்பர்களின் வழிகாட்டுதலால் ஜெயிப்பீர்கள். பயம் தீரும்.
மிருகசீரிடம் 1,2 : குழந்தைகளைப் பற்றி இருந்து வந்த கவலைகள் மறையும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : மன அழுத்தத்தினால் நிம்மதியைக் குலைத்துக் கொள்ளாதீர்கள்.
திருவாதிரை : உங்களின் வழிகாட்டுதலால் பலர் நன்மை அடைவர்.
புனர்பூசம் 1,2,3 : முந்தைய உழைப்பிற்கான பலன் இன்று கைக்கு கிடைக்கும்.

கடகம்
புனர்பூசம் 4 : பிறரிடம் நன்றி உணர்ச்சியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடையாதீர்கள்.
பூசம் : தந்தையின் ஆசி கிடைக்கும். தொழிலில் லாபம் பெருகும்.
ஆயில்யம் : மற்றவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

சிம்மம்
மகம் : உங்களின் முயற்சியால் பணியிடத்தில் பாராட்டுக் கிடைக்கும்.
பூரம் : அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தோற்றத்தில் கவர்ச்சி கூடும்.
உத்திரம் 1 : குடும்பத்தில் உள்ள பெரியோருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

கன்னி
உத்திரம் 2,3,4 : பிறரை நம்பிய செயல் ஒன்று வெற்றிகரமாக நிறைவேறும்.
அஸ்தம் : தாய்மாமனின் உதவி கிடைக்கும். நன்மை அதிகரிக்கும்.
சித்திரை 1,2 : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். நிம்மதி கிடைக்கும்.

துலாம்
சித்திரை 3,4 : திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்படும். குடும்பத்தினர் உங்களை பாராட்டுவர்.
சுவாதி : தடைப்பட்டு வந்த வேண்டுதல் இன்று நல்லபடியாக நிறைவேறும்.
விசாகம் 1,2,3 : பேச்சினால் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும்.

விருச்சிகம்
விசாகம் 4 : ஆசிரியரிடம் பாராட்டுப் பெறுவீர்கள். உற்சாகமான நாள்.
அனுஷம் : பணியிடத் தொல்லைகளை சமாளிப்பீர்கள். நண்பர்கள் பாராட்டுவர்.
கேட்டை : உங்களது சேவை பலராலும் இன்று பராட்டப்பெறும்.

தனுசு
மூலம் : உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறுவீர்கள். நிதிநிலை சீராகும்.
பூராடம் : குழந்தைகளால் நிம்மதி ஏற்படும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
உத்திராடம் 1 : பணியிடத்தில் உங்களின் தகுதிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்

மகரம்
உத்திராடம் 2,3,4 : வங்கிக்கணக்கில் இருப்புத்தொகை உயரும். கடன் தீரும்.
திருவோணம் : துயரங்கள் காணாமல் போகும். யோகமான நாள்.
அவிட்டம் 1,2 : வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நற்பெயர் வாங்குவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3,4: பேச்சினால் எதிலும் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சதயம் : இன்றைய செயலில் நன்கு யோசித்து முடிவு எடுங்கள்.
பூரட்டாதி 1,2,3 : ஆரோக்கியம் பற்றி இருந்து வந்த பயம் நீங்கும்.

மீனம்
பூரட்டாதி 4 : யாருக்கும் வாக்குக்கொடுக்காதீர்கள். அமைதி ஏற்படும் நாள்.
உத்திரட்டாதி : பணியிடத்தில் எதிர்பாராத நன்மை வரும். மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி: உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.