இன்று தடைப்பட்டுள்ள சேவைகள் எவை?

Mayoorikka
2 years ago
இன்று தடைப்பட்டுள்ள சேவைகள் எவை?

அரசாங்கத்தை பதவி விலகுமாறு  வலியுறுத்தி இன்று  முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  தபால் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்

இதற்கமைய நாடளாவிய ரீதியில் காணப்படும் 653 தபால் காரியாலயங்கள், மற்றும் 3 ஆயிரத்து 410 உப தபால் காரியாலயங்களின் பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன. 

இன்றைய வேலை நிறுத்த போராட்டத்திற்கு  வங்கித் துறையினர்  ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதற்கமைய இலங்கை வங்கி ஊழியர் சங்கம்  மற்றும்  ஏனைய வங்கி தொழிற்சங்கங்களும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளதாக வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், உரிமம் பெற்ற தனியார் வங்கிகளும் இன்றைய தினம் சேவைகளை மட்டுப்படுத்தி உள்ளன.