அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 29.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 29.04.2022

மேஷம்
அசுவினி : தந்தையால் எதிர்பாராத நன்மை உண்டு. செலவு கூடும்.
பரணி: புதிய முயற்சியை சிலநாள் தள்ளி வைக்க வேண்டியிருக்கும்.
கார்த்திகை 1 : உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற குறை நீங்கும்

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : இன்று மலைப்போல் வந்த பிரச்னை பனி போல் நீங்கி விடும்.
ரோகிணி : எடுத்த முயற்சி அனைத்தும் நன்மையும், லாபமும் தரும்.
மிருகசீரிடம் 1,2 : உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்னை தீரும்

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : தவறு செய்து பிரச்னையில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
திருவாதிரை : சுய பரிதாபம் வேண்டாம். நண்பர் உங்களால் உயர்வார்.
புனர்பூசம் 1,2,3 : எந்த முயற்சியானாலும் தாமதமான பலன்களே கிடைக்கும்.

கடகம்
புனர்பூசம் 4 : அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவரால் நன்மை உண்டாகும்.
பூசம்: தந்தைக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கவலை ஒன்று முடிவுக்கு வரும்.
ஆயில்யம் : பிறருக்கு நன்மை செய்வீர்கள். பெரியோரின் ஆசியை பெறுவீர்கள்

சிம்மம்
மகம் : தவறான சிந்தனையின் காரணமாக வீண்பிரச்னையில் மாட்டாதீர்கள்.
பூரம் : தொழில், வியாபாரத்தில் கவனத்துடன் செயல்படுவீர்கள்.
உத்திரம் 1 : குடும்பத்திற்கு நன்மை தரக்கூடிய செலவுகளை செய்வீர்கள்.

கன்னி
உத்திரம் 2,3,4 : உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர் உதவி செய்வார்.
அஸ்தம் : சிரமப்பட்டு உழைத்தால் உடனடி பலன் இருக்கும்.
சித்திரை 1,2 : உங்களை அதிகாரி பாராட்டுவர். நிதி நிலை சீராகும்.

துலாம்
சித்திரை 3,4 : உங்களின் நேர்மைக்கு பலன் உண்டு. வேலைப்பளு குறையும்.
சுவாதி : அதிர்ஷ்டத்தை நம்பி மனஅழுத்தம் அடைய வேண்டாம்.
விசாகம் 1,2,3 : உழைப்பு குறைந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

விருச்சிகம்
விசாகம் 4 : முன்பு உழைத்த உழைப்பிற்கு இன்று பலன் கிடைக்கும்.
அனுஷம் : வீடு வாங்குவது பற்றிய கவலை நீங்கும். நட்பு வட்டம் விரியும்.
கேட்டை : பெற்றோர் பெருமிதம் அடைவார்கள். உங்களுக்கு புகழ் கிடைக்கும்.

தனுசு
மூலம் : உழைப்பின் மூலம் பெரிய பலன்களை எதிர்பார்க்க வேண்டாம்.
பூராடம் : உங்களால் பலன் அடைந்தவர்கள் நன்றி பாராட்டுவர்.
உத்திராடம் 1 : உடல் சோர்வு ஏற்படாமல் கவனமாக இருங்கள்.

மகரம்
உத்திராடம் 2,3,4 : இன்று யாரிடமும் வீண் விவாதம் செய்ய வேண்டாம்.
திருவோணம் : சகோதரரால் உங்களுக்குச் சிறு நன்மை ஏற்படும்.
அவிட்டம் 1,2: சகோதரருடன் இருந்த பிரச்னை இன்று முடிவுக்கு வரும்.

கும்பம்
அவிட்டம் 3,4 : எதிர்பாராத பண வரவால் குடும்பத்தின் கஷ்டம் விலகும்.
சதயம் : புண்ணியச் செயலுக்காக குடும்பத்தினர் ஒன்றாக இணைவீர்கள்.
பூரட்டாதி 1,2,3 : குலதெய்வ வழிபாட்டு முயற்சி வெற்றிகரமாய் முடியும்.

மீனம்
பூரட்டாதி 4 : கடந்த நாட்களில் குடும்பத்தில் இருந்து வந்த வருத்தம் நீங்கும்.
உத்திரட்டாதி : நண்பர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகி ஒற்றுமை வரும்.
ரேவதி : மற்றவருக்கு உதவுவீர்கள். உங்களின் ஆலோசனைக்கு வரவேற்பு கிடைக்கும்.