அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 04.05.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 04.05.2022

மேஷம்
அசுவினி : எதிர்பார்த்த செயலில் நன்மையை காண்பீர்கள்.
பரணி : குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும். மனம் சஞ்சலப்படும்.
கார்த்திகை1 : மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : வழக்கமான செயல்களில் சில தடைகள் உண்டாகி பின்னர் சரியாகும்.
ரோகிணி : இன்று மாலை வரையில் குழப்பம் நீடிக்கும் அதன் பிறகு தெளிவு காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : உங்கள் பேச்சில் இருக்கும் உறுதியால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : வரவை விட செலவு அதிகரிக்கும். நிதானம் தேவை.
திருவாதிரை : குடும்பத்தில் எதிர்பாராத செலவு ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான நாள் .
புனர்பூசம் 1, 2, 3 : சில செயல்களை திட்டமிடாததால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : உங்கள் குடும்பத்திற்கு நண்பர் ஒருவர் வழியே நன்மை ஏற்படும்.
பூசம் : இன்று மாலை வரை உங்கள் முயற்சிகளில் லாபமிருக்கும்.
ஆயில்யம் : எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம்
மகம் : நீங்கள் நினைத்த செயல் இன்று நிறை வேறும்.
பூரம் : புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி வெற்றி பெறும்.
உத்திரம் 1 : கோபத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.அமைதி தேவை.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : உங்களுடைய புதிய முயற்சிக்கு வெற்றி உண்டாகும்.
அஸ்தம் : சுபச்செலவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
சித்திரை 1, 2 : புதிய நபர்களிடம் கூடுதல் விழிப்புணர்வு தேவை.

துலாம்
சித்திரை 3, 4 : இன்று மாலை வரை உங்கள் செயலில் நிதானம் தேவை.
சுவாதி : அலைச்சல் அதிகரிக்கும் அதனால் மனஅழுத்தம் உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 : இழுபறியாக இருந்த வேலை இன்று மாலைக்குப்பின் முடிவுக்கு வரும்.

விருச்சிகம்
விசாகம் 4 : உங்களுக்கு வேலைகளில் இருந்த நெருக்கடி குறையும்.
அனுஷம் : இன்று உங்கள் உழைப்பிற்குரிய பலனை கிடைத்து மகிழ்வீர்கள்.
கேட்டை : நீங்கள் எதிர்பார்த்திருந்த தகவல் இன்று வந்து சேரும்.

தனுசு
மூலம் : இறை அருளால் இன்று உங்கள் எண்ணம் நிறைவேறும்.
பூராடம் : விட்டுப்போன செயல்களில் துணிச்சலாக ஈடுபடுவீர்கள்.
உத்திராடம் 1 : விட்டுப்போன வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும் நாள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : நேற்று ஏற்பட்ட தர்ம சங்கடத்தில் இருந்து மீளுவீர்கள்.
திருவோணம் : வியாபாரம், தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
அவிட்டம் 1, 2 : குடும்பத்தில் ஒருவருக்கு நன்மை உண்டாகும். மகிழ்ச்சி கூடும் நாள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : வெளியிடங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
சதயம் : தொழிலில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 : முதலாளியிடம் பணிவாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : உங்கள் பேச்சில் கனிவு உண்டாகும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.
உத்திரட்டாதி : இன்று நீங்கள் பிறரிடம் பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை.
ரேவதி : மாலை வரையில் உங்கள் செயல்களில் இழுபறி நீடிக்கும்.