கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆசிய விளையாட்டுப் போட்டி ஒத்திவைப்பு

Prasu
4 years ago
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆசிய விளையாட்டுப் போட்டி ஒத்திவைப்பு

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உள்ள ஹாங்ஷு நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெறுவதாக உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக சீன ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இம்முடிவை எடுத்துள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே இதுகுறித்த அதிகார அறிவிப்பை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4