IPL Match55 - 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match55 - 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய  சென்னை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. 

டாஸ் வென்ற  டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்  பண்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் டெவன் கான்வேயும் - ருதுராஜ் கெய்க்வாட்டும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினர்.

41 ரன்கள் எடுத்த நிலையில் நோர்ட்ஜெ பந்துவீச்சில்  கெய்க்வாட் ஆட்டமிழந்தார்.  49 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த நிலையில் டெவான் கான்வே கலீல் அஹமத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். துபே 32 ரன்களும், கேப்டன் தோனி 8 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி  6 விக்கெட் இழப்பிற்கு  208 ரன்கள் குவித்தது. 

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர் டேவிட் வார்னர் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.  மிட்சல் மார்ஷ் 25 ரன்னும், ரிஷப் பந்த் 21 ரன்னும், சர்துல் தாக்கூர் 24 ரன்னும் அடித்தனர். 

மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். டெல்லி அணி 17.4 ஓவர் முடிவில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்து சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி 3 விக்கெட்களும், முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங், பிராவோ தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4