IPL Match57 = லக்னோவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத்

#IPL #T20
Prasu
2 years ago
IPL Match57 = லக்னோவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத்

புனே: லக்னோ அணியை வெறும் ரன்களுக்குள் சுருட்டி ஐபிஎல் தொடரின் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் அணி நுழைந்துள்ளது.

57வது லீக் போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் ஓப்பனிங் வீரர் விருதிமான் சாஹா 5 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி தந்தார். பிட்ச் ஆனது பேட்டிங்கிற்கு சற்று சவாலாக இருந்ததால் விக்கெட்கள் மலமலவென விழுந்தன. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்கள், மேத்யூவ் வேட் 10, டேவிட் மில்லர் 26 என அடுத்தடுத்து வெளியேறினர்.

மறுமுணையில் தூண் போன்று நிலைத்து நின்ற சுப்மன் கில் மட்டும் 49 பந்துகளில் 63 ரன்களை சேர்த்து குஜராத் அணியை காப்பாற்றினார். ராகுல் தேவாட்டியா கடைசி நேரத்தில் 22 ரன்களை விளாச 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்களை சேர்த்தது.

சுலபமான இலக்கு என நினைத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. குயிண்டன் டிக்காக் 11 ரன்களுக்கும், கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களும் ரஷித் கான் மற்றும் சாய் கிஷோரின் பவுலிங்கில் சிக்கி தவித்தனர். கரன் சர்மா (4), ஆயுஸ் பதோனி (8), ஸ்டோய்னிஸ் (2), ஹோல்டர் (1) என ஒற்றை இலக்க ரன்களுக்கு அவுட்டாகினர்.

இதனால் 13.5 ஓவர்களிலேயே லக்னோ அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேலும் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளுடன் ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் டைட்டன்ஸ் நுழைந்தது.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!