பரபரப்பான நிலையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட முக்கிய நியமனங்கள்
Nila
3 years ago

பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், மஹிந்த சிறிவர்தன நிதி அமைச்சின் செயலாளராகவும் தொடர்ந்தும் பணியாற்றவுள்ளனர்.
பிரதமரின் இராஜினாமாவை அடுத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் இல்லாதொழிக்கப்படவுள்ளதுடன், நாட்டின் அலுவல்களை தொடரும் வகையில் மீண்டும் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நியமனங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.



