முதல்முறையாக வடகொரியாவில் கொரோனா தொற்று; நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்!

Mayoorikka
3 years ago
முதல்முறையாக வடகொரியாவில் கொரோனா தொற்று; நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்!

வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வடகொரியா முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.

2019 ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதிலிருந்து, வடகொரியா நேற்றுவரை, தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லையென்று கூறிவந்தது. அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வடகொரியாவின் 2020 ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட 13,259 கொரோனா பரிசோதனை முடிவுகளும் அவ்வாறே இருந்தது. 

தற்போது, கொரோனா வைரஸும் உருமாற்றம் அடைந்து, டெல்டா ஓமைக்ரான் வகை என பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகளவில் பரவத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், வடகொரியாவில் நேற்றுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லாதிருந்த நிலையில், தற்போது முதல்முறையாக புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வடகொரியா முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

இதனை, `நாட்டின் கடுமையான அவசரகால நிகழ்வு' என ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக, வடகொரியா உயரதிகாரிகள் அடங்கிய குழுவுடன் நடத்திய பொலிட்பீரோ கூட்டத்தில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன்,

``குறுகிய காலத்துக்குள் கொரோனா தொற்றின் வேரை அகற்றுவதே எங்களின் குறிக்கோள். மேலும், மக்களின் உயர் அரசியல் விழிப்புணர்வின் காரணமாக, நிச்சயமாக அவசரநிலையை சமாளித்து, தனிமைப்படுத்தலை நாங்கள் வெல்வோம்.

அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள தங்கள் பகுதி மக்களை முழுமையாகத் தடுப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!