ஜனாதிபதி பல புதிய நியமனங்களை வழங்குகிறார்

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் செயற்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் இரண்டு மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர தலைவர் கே.டி.எஸ் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக ருவன் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் ரோஹன புஷ்பகுமார மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் மேலதிக ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களின் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக இருந்த ஜே.ஜே.ரத்னசிறி மீண்டும் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



