இலங்கை மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு

Nila
2 years ago
இலங்கை மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு

இலங்கையில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய அதனை தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்களை பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

பல்வேறு தரப்பினரால் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், தீ வைத்தல், சொத்துக்கள் கொள்ளையிடுதல், தாக்குதல் நடத்துதல் போன்ற பல்வேறு வன்முறைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும், வன்முறையாளர்களை அடையாளம் காண்பதற்காகவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 076 739 39 77 அல்லது 011 244 11 46 ஆகிய இலக்கங்களுக்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது, இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, 011 24 22 176, 011 23 20 145, 071 85 92 087, 071 85 94 942 மற்றும் 071 85 94 901 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு இது தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.