இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் - பிரித்தானிய விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#UnitedKingdom
#Lanka4
Reha
3 years ago

தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்க மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்திற்கு பயணத்திற்கு எதிராக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகள் அல்லது பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் பேரணி மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்" என்று பிரித்தானியாவின் வெளியுறவு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.



