மக்களின் பிரச்சினைகளை ஆராய நான்கு குழுக்கள் நியமனம்!

Prabha Praneetha
2 years ago
மக்களின் பிரச்சினைகளை ஆராய நான்கு குழுக்கள் நியமனம்!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து யோசனைகளை முன்வைப்பதற்காக நான்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாகல காரியவசம் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுக்கள் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யோசனைகளை முன்வைக்கவுள்ளன.