ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவியேற்கவுள்ள நான்கு அமைச்சர்கள்

Nila
2 years ago
 ஜனாதிபதி முன்னிலையில்  இன்று பதவியேற்கவுள்ள நான்கு அமைச்சர்கள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர்கள் கோரலாம் என்று கூறப்படுகின்றது.

புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிப் பக்கத்தில் சுயாதீன அணியாக இருந்து புதிய பிரதமரை ஆதரிப்பதற்கே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அந்தக் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சரவையில் பதவிகளை வகித்தாலும் அவர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக இருந்தே பதவிகளை வகிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் எதிர்க்கட்சிப் பக்கத்தில் தமக்கே பெரும்பான்மை இருப்பதாக காட்டி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரலாம்.

இதன்போது பெரும்பான்மையை சஜித் பிரேமதாசவுக்கு காட்ட முடியாத நிலைமை ஏற்படுமாயின் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்‌ஷ பதவியேற்கலாம் என்று கூறப்படுகின்றது.