ரணிலை பிரதமராக்க சர்வதேச அழுத்தமே காரணம்! இது தேசிய அல்லது இடைக்கால அரசாங்கம் அல்ல: குணதாச

Prathees
2 years ago
ரணிலை பிரதமராக்க சர்வதேச அழுத்தமே காரணம்! இது தேசிய அல்லது இடைக்கால அரசாங்கம் அல்ல: குணதாச

இது கோட்டா - ரணில் அரசாங்கம்இ இடைக்கால அல்லது தேசிய ஒருமித்த அரசாங்கம் அல்ல என கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

புதிய பிரதமரின் கீழ் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் வழிநடத்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போதே கலாநிதி குணதாச அமரசேகர இவ்வாறு தெரிவித்தார்.

சந்திரிகா – ரணில், மைத்திரி – ரணில் போன்ற அரசாங்கத்திற்கு ஒப்பிட்டார்.

ஏனைய கட்சிகள் அடங்கிய நிறைவேற்று சபையில் இருந்து அவர் இந்தத் தெரிவை மேற்கொள்ளாததால், அது ஜனாதிபதியின் ஒரே முடிவாகக் கருதப்பட வேண்டும்.

சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2003 இல் ரணில் விக்கிரமசிங்க விட்டுச் சென்ற இடத்திலிருந்து மீதியை ஆரம்பிப்பதாக அமரசேகர எச்சரித்தார்.

அமரசேகரவின் கருத்துப்படி, 11 கட்சிகள் கொண்ட கூட்டமைப்பு கோட்டா-ரணில் அரசாங்கத்தை ஆதரித்தால் அவர்களின் அரசியலும் முடிவுக்கு வரும் அவர் மேலும் தெரிவித்தார்.