நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்கள் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

#SriLanka #Fuel
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்கள் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

நாட்டிலுள்ள தற்போதைய எரிபொருள் இருப்பு தொடர்பில்  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் வினவிய போது, எதிர்வரும் சில தினங்களில் எரிபொருள் தாங்கி ஒன்று இலங்கைக்கு வராவிட்டால் இலங்கையின் எரிபொருள் இருப்பு படிப்படியாக இறுதிக் கட்டத்தை எட்டும் அபாயம் காணப்படுவதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலை நீடித்தால் மின் உற்பத்திக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள சுமார் 60 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஐந்து நாட்களாக எரிபொருள் கையிருப்பு கிடைக்கவில்லை எனவும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

எரிபொருளை ஏற்றிச் செல்வதற்கு போதுமான வாகனங்கள் இருந்தும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் போதிய எரிபொருளை வெளியிடுவதில்லை என பவுசர் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறையினால் மூடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உட்பட அனைத்து நிரப்பு நிலையங்களிலும் இன்று காலையும் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

இதேவேளை, எரிவாயு மற்றும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக இன்று நீண்ட வரிசையில் காத்திருந்ததாக  செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

எரிவாயு விநியோகத்தை கோரி நாவின்ன பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் சிலர் இன்று காலை நாவின்ன பகுதியில் உள்ள ஹைலெவல் வீதியை மறித்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மேலும், மட்டக்குளிய பிரதேச மக்களும் எரிவாயு வழங்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.