ஜே.வி.பி தலைவரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்
Prathees
3 years ago

அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கே இன்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.
"பொருளாதார நெருக்கடிக்கு நிலையான, உள்ளடக்கிய தீர்வுகளை நோக்கி நகரும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக நான் பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறேன்" என்று அமெரிக்க தூதுவர் ட்வீட் செய்துள்ளார்.
"இன்று, இலங்கையர்கள் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்கள் குறித்து விவாதிக்க நான் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தேன்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



