வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சூழ்நிலைக்கு உதவ விமானப்படை தயார் !

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்பட்டால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வழங்குவதற்காக விமானம் மற்றும் தொடர்புடைய பணியாளர்களை அனுப்புவதற்கு இலங்கை விமானப்படை (SLAF) தயார் நிலையில் உள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏதேனும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் விமானம் மற்றும் தொடர்புடைய பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன பணிப்புரை விடுத்துள்ளார்.
இரத்மலானை, கட்டுநாயக்க, ஹிங்குராங்கொட மற்றும் அனுராதபுரம் ஆகிய விமானப்படைத் தளங்களில் இலங்கை விமானப்படையின் விமானங்களும் உலங்குவானூர்திகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகளுக்காக விசேட குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.



