மீண்டும் விடுதலைப் புலிகள் என்ற செய்திகளில் உண்மையில்லை – பாதுகாப்பு அமைச்சு
Prabha Praneetha
3 years ago
விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தக்ப்போவதாக வெளியான செய்திகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நேற்று மறுத்துள்ளது.
திஹிந்து வெளியிட்ட செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றும் அத்தகைய அச்சுறுத்தல் குறித்து தங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்திய உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி வெளியான இந்த செய்திகள் இலங்கை ஊடகங்களால் பரவலாக பகிரப்பட்டது.
இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட்டுவரும் நிலையில் திஹிந்து வெளியிட்ட செய்தி, மிகவும் கவலையளிக்கிறது என மனோ கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.