பதவியில் இருந்து நீக்கப்படும் சவேந்திர சில்வா?!

Prabha Praneetha
2 years ago
பதவியில் இருந்து நீக்கப்படும் சவேந்திர சில்வா?!

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

இராணுவ தளபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவிக்காது, அமெரிக்க தூதுவரை சந்தித்தது அடிப்படை குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறியமை இரண்டாவது குறற்ச்சாட்டாக சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் அனுராதபுரத்தில் உள்ள ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலை பாதுகாக்க தவறியமை தொடர்பாகவும் சவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலுக்கு பாதுகாப்பு வழங்காமை தொடர்பாக பல இராணுவ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பில், இராணுவ தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தாக்கி அழிக்கப்பட்ட போது அவற்றை தடுக்க எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தியுள்ளதாக பேசப்படுகிறது.