உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கவலை

Reha
4 years ago
உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கவலை

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாக உக்ரைன் அதிபர் விலாடிமர் ஜெலென்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்,

ரஷியா படையெடுப்பு தொடங்கி 84 நாட்கள் ஆகும் நிலையில், இது பைத்தியகாரத்தனமாக இருந்தாலும் ரஷிய படைகள் இன்னும் தங்கள் முயற்சிகளை நிறுத்தவில்லை என்று அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். 

உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை ரஷியா முற்றுகையிடுவது உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தலைநகர் கீவை கைப்பற்ற தவறிய பின்னர் ஏப்ரல் 19 அன்று அறிவிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட படையெடுப்பில் ரஷிய படைகள் டான்பாஸ் மீது பெரும் தாக்குதலை நடத்தி வருவதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4