பசுமை இல்லத்தில் கஞ்சா பயிரிட்ட பெண் கைது: 1700 செடிகள் மீட்பு

Prathees
2 years ago
பசுமை இல்லத்தில் கஞ்சா பயிரிட்ட பெண் கைது: 1700 செடிகள் மீட்பு

கிரீன்ஹவுஸ் ஒன்றில் கஞ்சா பயிரிட்ட ஒரு பிள்ளையின் தாயார் நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம்  (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மற்றும் பயிரிடப்பட்டிருந்த 1700 கஞ்சா செடிகள் வெலிமடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.ஜே.ஹேரத்துக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மியானராவ பிரதேசத்தில் உள்ள வீட்டு காணியில் உள்ள பசுமை இல்லத்தில் கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கணவர் இராணுவ சிப்பாய் என சுற்றிவளைப்பை மேற்கொண்ட நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் 3 முதல் 5 அடி உயரமும், கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் சுமார் 25 கிலோ எடையும் இருந்தது.

கஞ்சா செடிகளின் சந்தை பெறுமதியின் படி சுமார் 1.5 மில்லியன் ரூபா என சோதனையை மேற்கொண்ட விசேட அதிரடிப்படை  அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!