இலங்கை மின்சார சபை தவறிழைத்தமையால் வேலையிழக்கப்போகும் 7 ஆயிரம் ஊழியர்கள்!

Nila
2 years ago
இலங்கை  மின்சார சபை தவறிழைத்தமையால் வேலையிழக்கப்போகும் 7 ஆயிரம் ஊழியர்கள்!

தனியார் துறையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபை 23 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளது.

உள்ளுர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவன் பிரசங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தேசிய மின்வட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை செலுத்த தவறியுள்ளமை காரணமாக சிறிய மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் மூடப்படும் அபாயத்த்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக தனியார் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் சுமார் 7 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!