மற்றுமொரு நபர் கைது : சிறுமி விசாரணையில் அம்பலமான தகவல்கள்

Prabha Praneetha
2 years ago
மற்றுமொரு நபர் கைது : சிறுமி  விசாரணையில் அம்பலமான தகவல்கள்

அட்டுலுகம பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், சிறுமியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை,  சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் இதற்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது. குறித்த நபரின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் சேறு படிந்திருந்த சாரம் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.  

சிறுமியின் பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, சிறுமியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறுகிறது.

இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனையை அடுத்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படும் என பண்டாரகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

சிறுமி கொல்லப்படுவதற்கு முன்னர் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், இன்று நடத்தப்படும் பிரேத பரிசோதனையின் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர். 

சிறுமி காணாமல் போன தினத்தில் கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்ற போது குறித்த 28 வயதுடைய நபர் நடைபாதையில் இருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர் அவர் சிறுமியை சதுப்பு நிலத்தை நோக்கி இழுத்துச் சென்றதாகவும், சிறுமி கத்தத் தொடங்கியதால் சேற்றில் முகத்தை வைத்திருக்கும் போது அவர் இறந்திருக்கலாம் என்றும் பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுமியை வீதியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சிறுமி ஒருவர் பார்த்துவிட்டு வீதியில் தனியாக இருப்பது குறித்து விசாரித்து விட்டு சென்றதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தாத்தா வரும் வரை காத்திருக்கின்றேன் என சிறுமி ஆயிஷா தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.  

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!