இலங்கையில் உணவுப் பற்றாக்குறையினால் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரிப்பு !

Nila
2 years ago
இலங்கையில் உணவுப் பற்றாக்குறையினால் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரிப்பு !

உணவுப் பற்றாக்குறையினால் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் நால்வர் கடுமையான போஷாக்கு குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும், இந்த குழந்தைகளுக்கான விசேட போஷாக்கு உணவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்தியர் தெரிவித்தார்.

விடுதியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்நிலைமையை தடுக்கும் வகையில் வீட்டுத்தோட்டம் அமைப்பதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதுடன் குறுகிய காலத்தில் விளைச்சலைத் தரும் போஷாக்கு நிறைந்த உணவுகளை பயிரிடுவதில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அண்மைய நாட்களில் 100க்கும் அதிகமான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட்தொற்றின் போது ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் விளையாட்டு இல்லாமை ஆகியவை குழந்தைகளின் நீரிழிவு வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!