பங்களாதேஷில் இருந்து 2.2 மில்லியன் டொலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு

Prathees
2 years ago
பங்களாதேஷில் இருந்து 2.2 மில்லியன் டொலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பங்களாதேஷ் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

நேற்று காலை சுகாதார அமைச்சில் சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், வலிப்பு நோய், ஆஸ்துமா  உள்ளிட்ட பல நோய்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பல்வேறு நோய்களுக்கான 79 அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த மருந்துப் பொருட்களை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவும் சுகாதாரத் துறையில் உயர் மட்ட உறவும் மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் வைத்தியர்கள் முதல் ஏனைய ஊழியர்கள் வரை பரிமாற்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!