வரலாற்றில் முதன்முறையாக பாரிய சிக்கலில் இலங்கை -நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

Nila
2 years ago
வரலாற்றில் முதன்முறையாக பாரிய சிக்கலில் இலங்கை -நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

வரலாற்றில் இதுவரை இலங்கை முகக்கொடுக்காத பாரிய சிக்கல் நிலையொன்று தற்போது ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த சில மாதங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கென்றால், இன்னுமொரு நாடு இலங்கைக்காக  பிணையாக வேண்டிய அளவிற்கு நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் வரலாற்றில் இவ்வாறானதொரு நிலைமை ஒரு போதும் ஏற்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறான கடன்களை பெறுவதற்கு வேறு நாடு இலங்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உலக வங்கி ஏற்கனவே கூறியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சி தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டிய அமைச்சரவையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் வெளிப்படையாக கலந்துரையாடியதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இலங்கை, அடுத்த சில மாதங்களில் செலுத்த வேண்டிய அவசியமான டொலர்களை கண்டுபிடிக்க வேண்டிய மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.
 
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் இதுவரை முன்வைக்கப்பட்ட பொருளாதார திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து உலகின் நம்பிக்கையை அரசாங்கம் பெறவில்லை. இவ்வாறான கடன்களைப் பெறுவதற்கு பொருளாதாரக் கொள்கை கட்டமைப்புகள் சரியாக வகுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!