அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் உயிரிழப்பு

#SriLanka #weather #Death
Prasu
2 years ago
அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் உயிரிழப்பு

களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகளிலும் அத்தனகல்லு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளிலும் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (01) 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் ஒருவர் வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று மழை சற்று குறைந்துள்ள போதிலும் பல தாழ்வான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் களுத்துறை ஹல்வத்துர பிரதேசத்தில் 101.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!