இலங்கை வரித் திருத்தத்தின் எதிரொலி பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு!

Nila
2 years ago
இலங்கை வரித் திருத்தத்தின் எதிரொலி பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு!

அரசாங்கத்தினால் வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை காரணமாக, பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வட் மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட வரிகளை அரசாங்கம் நேற்று முதல் அதிகரித்தது

இதன்படி, வட் எனப்படும் பெறுமதி சேர் வரி எட்டு வீதத்திலிருந்து 12 வீதம் வரை அதிகரிக்கப்பட்டது

அத்துடன், தொலைத் தொடர்பு வரி 11.25 வீதத்திலிருந்து 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, தற்போதைய பொருளாதார நிலையில், வரி அதிகரிப்பானது மக்களுக்கு மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், மக்களின் பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டே வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இலங்கை, குறைந்த வரி விதிப்பு முறைமையை அறிமுகப்படுத்தியது.

இதன் ஊடாக வருடமொன்றுக்கு 600 பில்லியன் ரூபாய் முதல் 800 பில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!