உலகின் மிக காரமான மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!

#United_States
Prasu
4 years ago
உலகின் மிக காரமான மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!

உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனையை இளைஞர் ஒருவர் படைத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் கிரெக் ஃபோஸ்டர். இவர் உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். மூன்று கரோலினா ரீப்பர் மிளகாய்களை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கரோலினா ரீப்பர் மிளகாய்களை கிரெக் ஃபோஸ்டர் சாப்பிடும் வீடியோவை கின்னஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

நம் உணவில் உள்ள காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் (SHU) என்ற அலகில் மதிப்பிடுவார்கள். அதன்படி கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16,41,183 ஆகும். இதுவே உலகின் மிகவும் காரமான மிளகாய் ஆகும்.

இந்த கரோலினா மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைப்பது கிரெக் ஃபாஸ்டருக்கு இது முதல் முறையல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிமிடத்தில் 120 கிராம் கரோலினா ரீப்பர் மிளகாய் சாப்பிட்டு கின்னஸ் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்த சாதனை தற்போது வரை முறியடிக்கப்படாமல் உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4