கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகள் தொடர்பான அறிவிப்பு
Nila
2 years ago

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் குறித்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
85 பாடசாலைகளில் ஸ்தாபிக்கப்படவுள்ள 106 மத்திய நிலையங்கள் ஊடாக இந்த திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படும்.
இந்த விடைத்தாள் திருத்தப் பணிகளில் 32,368 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.



