5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Mayoorikka
2 years ago

ஒகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியனவற்றை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார்.
அதேநேரம், நேற்றுடன் நிறைவடைந்த கல்விபொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குரிய செயன்முறை பரீட்சைகளை எதிர்வரும் ஜூலை மதம் 10 திகதிக்கு நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.



