கடன்களை கூட முறையாக பதியவில்லை: பிரதமரால் முறையாக வரவு செலவு திட்டமொன்றை முன்வைக்க முடியாது

Mayoorikka
2 years ago
கடன்களை கூட முறையாக பதியவில்லை: பிரதமரால் முறையாக வரவு செலவு திட்டமொன்றை  முன்வைக்க முடியாது

நாட்டின் நெருக்கடி நிலைமைகளை கையாளக்கூடிய பொருளாதார வேலைத்திட்டமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுவரை முன்வைக்கவில்லை. இவ்வாறான நிலைமையில் ஆறு வார காலத்திற்குள் இடைக்கால வரவு செலவு திட்டமொன்றை முன்வைக்க முடியாதென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

இடைக்கால வரவு செலவு திட்டத்தை தயாரிக்க போதுமான தரவுகள் கூட இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. கடன்களை கூட முறையாக பதியவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். 

அவ்வாறான நிலைமையில் பிரதமரால் முறையாக வரவு செலவு திட்டமொன்றை  முன்வைக்க முடியாது எனவும் அவர் கூறினார். 

கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட கடன்களை முறையாக இவர்கள் தரவுகளாக பதியவில்லை. ஒட்டுமொத்த நாட்டையும் மட்டுமல்ல, முழு உலகத்தையும் ஏமாற்றும் வகையில் செயற்பட்டுள்ளனர். நல்லாட்சி காலத்திலும் இந்த தவறு இடம்பெற்றுள்ளது. ஆகவே எவரும் இதில் தங்களை நியாயப்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார். 

அதேபோல், தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க அரசாங்கத்திடம் இருக்கும் வேலைத்திட்டம் என்ன என்பதை இப்போதாவது அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இல்லையேல், பாராளுமன்ற குழுக்களில் எமது யோசனைகளுக்கு இடமளித்து தற்போதைய நெருக்கடிகளை கையாள வேண்டும். இதற்கு எமது ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயாராக உள்ளோம்.  

அரசாங்கமும், சர்வதேச நாணய நிதியமும் மேற்கொண்ட  தொழிநுட்ப கலந்துரையாடலில் இணங்கிய விடயங்களையும், அது குறித்த அறிக்கையையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை கலந்துரையாடலுக்கு உற்படுத்தி பொது இணக்கத்திற்கு வர நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!