தகாத வார்த்தைகளால் பொலிஸாரை திட்டித்தீர்த்த பிரபல அமைச்சரின் மகன் மற்றும் மருமகள்
Kanimoli
2 years ago

அரசியல்வாதி ஒருவரின் மகனும் அவரது மனைவியும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தூஷித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக காணப்படுகிறது.
நேற்றையதினம் குறித்த இளைஞர் ஆபத்தான முறையில் குளிர்சாதனப் பெட்டி ஒன்றை தனது வாகனத்தில் வைத்து அதிவேக நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதன்போது அவரை மறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், குறித்த இளைஞரிடம் விசாரணையை மேற்கொண்டதுடன் வாகனத்தை பின்னுக்கு எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதன்போதே இளைஞரான அரசியல்வாதியின் மகனும் அவரது மனைவியும் பொலிஸ் கான்ஸ்டபிளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் பெலியத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



