திங்கட்கிழமை முதல் தனியார் பேருந்துகளை சேவையில் இருந்து நீக்க முடிவு

Prathees
2 years ago
திங்கட்கிழமை முதல் தனியார் பேருந்துகளை சேவையில் இருந்து நீக்க முடிவு

பேருந்துகளுக்கு உரிய முறையில் டீசல் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், திங்கட்கிழமை (06) தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து நீக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக டீசல் விநியோகம் செய்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் பல தடவைகள் உறுதியளித்த போதிலும்இ அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

எனினும் அண்மையில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை காரணமாக பஸ் உரிமையாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் பல நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றன.

சாரதிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் டீசல் பெற்று பரீட்சை எழுதுபவர்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தனர்.

எனவே தொடர்ந்து டீசல் வழங்குவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் தயாரிக்கப்பட வேண்டும்.

இல்லை என்றால் இம்மாதம் 6ஆம் திகதி முதல் பேருந்துகளை சேவையில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும்இ டீசல் பற்றாக்குறையால் சில பேருந்துகள் பயணிகளுடன் பாதியிலேயே நிறுத்தப்படுவதாகவும் இதனால் பேருந்து பயணிகளும் கூட செய்வதறியாது தவிப்பதாகவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!