இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் இந்தியாவின் திட்டம் என்ன? இந்திரஜித் குமாரசுவாமி விளக்கம்!

Nila
2 years ago
இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது  தொடர்பில் இந்தியாவின் திட்டம் என்ன? இந்திரஜித் குமாரசுவாமி விளக்கம்!

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர் வரையான நிதி கிடைக்கப்பெறலாம் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக இந்தியா 4 தசம் 5 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழிக் கலந்துரையாடலின் போதே முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், எரிபொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்காக மற்றுமொரு பில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய கணக்குத்தீர்வக ஒன்றியத்தின் கீழ் இந்தியாவுக்கான ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள் மூலம் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எரிபொருள் கொள்வனவுக்காக பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற Quad நாடுகளின் கூட்டத்தின் போது இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கருத்துக்களை முன்வைத்ததாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஜப்பான் குறிப்பிட்டளவு நிதியினை வழங்கலாம் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!