கொழும்பு வைத்தியசாலையில் குழந்தைகள் உணவு இல்லாமல் திண்டாட்டம்

Kanimoli
2 years ago
கொழும்பு வைத்தியசாலையில் குழந்தைகள் உணவு இல்லாமல் திண்டாட்டம்

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தற்போது மருந்துகளுக்கு மேலதிகமாக கடுமையான உணவு நெருக்கடியை அனுபவித்து வருவதாக வைத்தியசாலை தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

சிறுவர்களின் சரியான வளர்ச்சிக்கு புரதம் உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்றாலும் தற்போது நோயாளிகளாக உள்ள குழந்தைகளின் தினசரி உணவில் இறைச்சி, மீன், முட்டை, பருப்பு ஆகிய ஒன்றும் இல்லை என தெரியவந்துள்ளது.


தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில சிறுவர்களுக்கு தினமும் 10 முட்டைகள் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தீயில் கருகிய சருமத்தை மீட்க புரோட்டீன் உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். . எப்படியிருப்பினும் தற்போது தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு ஒரு கொடையாளரிடமிருந்து குறைந்த எண்ணிக்கையிலான முட்டைகளை பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவை முடிந்த பின்னர் அந்த குழந்தைகளுக்கு முட்டைகளை வழங்க முடியாத நிலைமை மீண்டும் ஏற்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நாளாந்தம் அனுமதிக்கப்படும் கணிசமான எண்ணிக்கையான சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!