தாயின் கண்முன்னே மாணவியை கடத்த முற்பட்ட இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்! யாழில் சம்பவம்

Mayoorikka
1 year ago
தாயின் கண்முன்னே மாணவியை கடத்த முற்பட்ட இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்! யாழில் சம்பவம்

யாழ்.வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியின் கையைப் பிடித்து கயெஸ் வாகனத்தில் கடத்த முற்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த மக்கள், அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டையில் பஸ்சில் வந்து இறங்கிய மாணவியை கூட்டிச் செல்வதற்காக தாயார் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த வேளை தாயின் கண்முன்னே கயெஸ் வாகனத்தில் மகளை கடத்த முற்பட்ட போது அங்கிருந்த இளைஞர்களால் மடக்கிப் பிடித்து நல்ல அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்தனர்.

வட்டுக்கோட்டைப் பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்துவதற்காக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் சமீப காலமாக சிறுவர்கள் கடத்தல் கொலை போன்ற செய்திகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இன்றைய தினமும் யாழில் தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுமி காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.