இலங்கைக்கு சரியான தலைவர்கள் கிடைக்கவில்லை-எரிக்சொல்ஹெய்ம் கவலை!

Nila
2 years ago
இலங்கைக்கு சரியான தலைவர்கள் கிடைக்கவில்லை-எரிக்சொல்ஹெய்ம் கவலை!

இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தற்போதைய தலைமைத்துவமானது தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவமாக இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அதேவேளை ராஜபக்சகளின் வீழ்ச்சியின் வேகம் பல அவதானிகளிற்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அவர்களின் பெரும்பான்மை பெற்று 03வருடங்களே ஆகும் நிலையில் அதிகாரத்தை ஒரே குடும்பத்திடம் அதிகளவு குவித்தமையும் பொருளாதாரத்தை திறமையற்ற விதத்தில் கையாண்டமையுமே இந்த வீழ்ச்சிக்கு காரணமெனவும் சுட்டிக்காட்டினார்.

பல தசாப்த கால நெருக்கடிகளுக்கு பின்னரும் சிங்கள பௌத்தர் ஆதிக்கம் செலுத்தும் கொள்கையில் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லீம்களிற்கான சுயாட்சி என்ற விடயத்திற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. அதேவேளை அனைத்து மக்களிற்கும் ஏற்ற விதத்தில் இந்த விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டும் என இலங்கை பிடிவாதம் பிடிக்கின்றது எனவும் தெரிவித்தார்.

இதற்கு அப்பால் சிங்கப்பூரின் லீ குவான் யூ அல்லது இந்தியாவின் நரேந்திர மோடி போன்றவர்கள் வழங்கிய தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய தலைவர்கள் இலங்கைக்கு கிடைக்கவில்லை எனவும் ஸ்திரமான அபிவிருத்தியடையும் பொருளாதாரம் அனைவருக்கும் நன்மையளிக்கும் எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!