வவுனியாவில் மாயமான இளைஞன் வீடு திரும்பியுள்ளார்

Kanimoli
1 year ago
வவுனியாவில் மாயமான இளைஞன் வீடு திரும்பியுள்ளார்


வவுனியா குருமன்காட்டில் வசித்து வந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞன் கடந்த சில தினங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.

எனினும் நேற்று மாலை குறித்த இளைஞர் வீடு திரும்பியுள்ளதாகவும் வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டினால் யாழ்ப்பாணத்திலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு ஒருவரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டதாகவும் தற்போது காணாமல் போய்விட்டதாக செய்திகள் பரவியதை அடுத்து மீண்டும் திரும்பி வந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இளைஞனை இன்று காலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன், தாம் வழங்கிய முறைப்பாட்டினை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.