கார் விபத்தில் பொலிஸ் பரிசோதகரின் மரணத்துக்கு காரணமான மருத்துவருக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

Prathees
2 years ago
கார் விபத்தில் பொலிஸ் பரிசோதகரின் மரணத்துக்கு காரணமான மருத்துவருக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை மற்றும் பொலிஸ் பரிசோதகரின் மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட விசேட வைத்தியர் ஒருவருக்கு 11 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்களுக்கு 100 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் திணைக்களத்தின் குத்துச்சண்டை அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய இன்ஸ்பெக்டர் அஜந்த காமினி பெரேராவின் உறவினர்களுக்கு நட்டஈட்டை வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.

விபத்தின் போது, ​​குற்றம் சாட்டப்பட்ட வைத்தியரின் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதுடன் மேலும் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக நீதிபதி மேலும் தெரிவித்தார்.

இதன்படி வாகன உரிமையாளர்கள் இருவருக்கும் தலா 500,000 ரூபாவை செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 விபத்தில் உயிரிழந்த பொலிஸ் பரிசோதகர் சர்வதேச குத்துச்சண்டை நடுவராக செயற்பட்டதாகவும் விபத்து இடம்பெற்ற போது அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் வாகனத்தில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

தனது மூத்த பிள்ளை விபத்தில் காயமடைந்து தற்போது அங்கவீனமடைந்துள்ளதாகவும் இலங்கை தேசிய நீச்சல் அணியில் அங்கம் வகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்தினால் ஊனமுற்றதாகவும் நீச்சல் போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகள் அடங்கிய திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் சிறப்பு மருத்துவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது.

2018 செப்டெம்பர் 30 ஆம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட வைத்தியர் கவிங்க குணவர்தனவிற்கு எதிராக கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை, விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை மற்றும் பொலிஸ் பரிசோதகரின் மரணம் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!