ரஷ்ய விமானம் தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் குழப்பம்

Prathees
2 years ago
ரஷ்ய விமானம் தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் குழப்பம்

இலங்கை வந்தவுடன் ரஷ்ய விமானங்கள் எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்கப்பட மாட்டாது என ரஷ்ய கூட்டமைப்பின் உயர்மட்ட இராஜதந்திர தலைவர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச தலைவர்கள் எழுத்து மூலம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இம்மாதம் 2ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இலங்கைக்கு  அதிக சுற்றுலாப் பயணிகள் குழு வருகை தரும்  நாடு ரஷ்யா.

இந்த குளிர்காலத்தில் சுமார் 400,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 2ஆம் திகதி ரஷ்யாவில் இருந்து வருகை தந்த இந்த விமானத்தில் சுமார் 250 சுற்றுலா பயணிகள் ரஷ்யா வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விமானம் உட்பட பல விமானங்கள் ஐரிஷ் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் காப்பீடு செய்யப்பட்டன, திடீர் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக காப்பீட்டு பிரீமியத்தை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இதற்கு தீர்வாக ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் இந்த விமானங்கள் அனைத்தையும் ரஷ்யாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் மறுகாப்பீடு செய்துள்ளது.

அயர்லாந்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பிரீமியம் செலுத்துவது இடைநிறுத்தப்பட்டதற்கு எதிராக அவர்கள் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகள் பலர் கடந்த 2ஆம் திகதி அவசர அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், குறித்த தடை உத்தரவை கையளிப்பதற்காக விமானத்தின் விமானிகளைக் கண்டறிந்துஇ பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய பிரதான குடிவரவு அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏ-330 எயார்பஸ் விமானம் ஏழு தடவைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி மீண்டும் ரஷ்யாவிற்கு திரும்பியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!