பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இல்லத்தில் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!
Nila
2 years ago

வெள்ளவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இல்லத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் வலப்பனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை தயா வீதியில் அமைந்துள்ள வீட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் சுமார் எட்டு இராணுவத்தினர் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



