மட்டுப்படுத்தப்படும் தனியார் பேருந்து சேவைகள்

Prabha Praneetha
2 years ago
மட்டுப்படுத்தப்படும் தனியார் பேருந்து சேவைகள்

டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை  முதல் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை தனியார் பேருந்து நடத்துநர்கள் மட்டுப்படுத்தியுள்ளனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

“தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களாக பேருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பேருந்துகளுக்கு டீசல் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், அதற்கான வேலைத்திட்டம் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இதனால், பேருந்துகள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட நேரம் நிறுத்த வேண்டியுள்ளது.

பொதுப் போக்குவரத்துத் துறையில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்று கூறிய அவர், பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ஒரு வாரத்திலாவது டீசல் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சகங்கள் வகுக்க வேண்டும் என்றார்.

இல்லை என்றால் ஜூன் 6 முதல் பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர (க.பொ.த) சாதாரண தர (சா/த) பரீட்சைகளும் முடிவடைந்துள்ளதால், எமக்கு தீர்வு வழங்கப்படாவிடின் செயற்பாடுகளை இடைநிறுத்தவும் தயங்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.     

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!