இலங்கை மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்த ரஷ்யா

Kanimoli
2 years ago
இலங்கை மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்த ரஷ்யா

ரஷ்ய எரோஃப்ளோட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தை தடுத்து வைத்துள்ளமைக்கு சிறிலங்கா அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கையானது நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரஷ்ய எரோஃப்ளோட் விமான சேவை இலங்கைக்கான வணிக விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

ரஷ்ய 'எரோஃப்ளோட்' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் எதிர்மறையான தாக்கம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு சிறிலங்கா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்தா அபேவிக்ரம லியனகேயுடனான சந்திப்பின் பின்னர் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

அதுமட்டுமன்றி, இலங்கைக்கான வணிக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் ரஜிவ் சூரியாராச்சியிடம் நாம் வினவிய போது, விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!