இலங்கைக்கு தொடர்ந்தும் அத்தியாவசியப் பொருட்கள்!

Prabha Praneetha
2 years ago
இலங்கைக்கு தொடர்ந்தும் அத்தியாவசியப் பொருட்கள்!

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினை இன்று காலை சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக அரசாங்கத்தின் முதலமைச்சர் ஒருவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கைக்கும் இந்தியாவின் மாநிலங்களுக்கும் இடையிலான அதிக தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தின்கீழ் இலங்கையின் உயர்ஸ்தானிகர், தமிழக முதலமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்ததாக உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் உயர்ஸ்தானிகரும், முதலமைச்சரும் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவுகள் மற்றும் கடற்றொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தனர்.

தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான பழமையான மற்றும் வலுவான இன, கலாசார மற்றும் மத தொடர்புகளை மீளாய்வு செய்து அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

இலங்கையில் பல்கலைக்கழகம் போன்ற பொருத்தமான வளாகத்தில், புகழ்பெற்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலையை நிறுவ விருப்பம் வெளியிட்டார்.

முதலமைச்சரின் இந்த யோசனையை உயர் ஸ்தானிகர் மொரகொட வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் முதலமைச்சர் ஸ்டாலினையும் இலங்கைக்கு வருமாறு உயர்ஸ்தானிகர் மொரகொட அழைப்பு விடுத்துள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!