வேலைக்காக வெளிநாடு செல்லும் அரச ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு சம்பளமில்லாத விடுமுறை

#SriLanka #government
Prasu
2 years ago
வேலைக்காக வெளிநாடு செல்லும் அரச ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு சம்பளமில்லாத விடுமுறை

வேலை அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார் .

அமைச்சரின் கூற்றுப்படி, அரச உத்தியோகத்தர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சகல சலுகைகளுடனும் அவர்களது சேவைக்கால தரங்களை மீளப் பெறுவார்கள்.

இதன் மூலம் அரசு ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவதாகவும் இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .

Covid-19 தொற்றுநோய்க்குப் பின்னர் பொது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையும் வழங்கப்பட்டுள்ளது, இது அவர்களின் சுமைகளைக் குறைப்பதோடு எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் எரிபொருளைச் சேமிக்கவும் வழிசெய்கிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!